ஆறு மற்றும் ஏரிகளில் பாதுகாப்பான இடங்களில் மட்டுமே குளிக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-சேலம் மாவட்டம் ரெட்டியூர் காவிரி ஆற்றுப் பகுதியில் ஈரோடு விஜயமங்கலத்தைச் சேர்ந்த ஆறு பேர் குளிக்கச் சென்றனர். அவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.
ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டு, அவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க சேலம் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியின்போது, தனுஸ்ரீ என்பவரை பாதுகாப்பாக மீட்டனர். இதே போன்று மதுரை மாவட்டம் கீழையூர் கிராமத்தில் குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்: மேட்டூர் அணையில் நீர் திறந்தவுடன், சம்பந்தப்பட்ட காவிரி கரையோர மாவட்ட நிர்வாகங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தேன். நீர் திறப்புக் காலங்களில், காவிரி ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள், நீர் வழித்தடங்கள், அணையின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள், மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறும், குழந்தைகளை நீர் நிலைகளில் அனுமதிக்காமல் இருக்கும்படி தண்டோரா, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் வாயிலாக முன்னெச்சரிக்கை செய்திகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.
ஆனாலும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் ஏற்படாமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆறு மற்றும் ஏரியில் குளிக்கச் செல்லும்போது உரிய பாதுகாப்பான இடத்தில் மட்டுமே குளிக்க வேண்டும். அனுமதி இல்லாத இடங்களுக்குச் செல்லக் கூடாது.
ஆறு பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: நீரில் மூழ்கி உயிரிழந்த ஆறு பேர் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிவிப்பில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாக்அவுட் சுற்று நம்பிக்கையில்...
தமிழகம் எதிர்கொள்ளும்!

தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்தில் திமுக - அதிமுக வாக்குவாதம்

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆய்வு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


