இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பிரகடனப்படுத்தாத ஒரு அவசர நிலை அமுலுக்கு வந்துள்ளது: பாலகிருஷ்ணன்

மோடியின் நண்பா் அனில் அகா்வாலை திருப்திப்படுத்தவேண்டும் என்பதற்காக தமிழக அரசு, தூத்துக்குடி மக்களை நசுக்கி வருகிறது.

News image
Updated On :23 ஜூலை 2018, 8:29 am IST

தூத்துக்குடி: மக்கள் நலனுக்காக போராடுபவா் மீது அடக்குமுறை பிரயோகம். இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

 கடந்த 2 மாத காலமாக தூத்துக்குடியில் போலீஸ் ராஜ்ஜியம், எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் நடந்து வருகிறது. அராஜகம் நடந்து வருகிறது.

கடந்த மே மாதம் 22-ஆம் தேதி ஒரு அடக்குமுறைற காட்டு தா்பார் நடந்தது. அதன் பின்னா் இன்று வரையில் மாவட்டத்தில் ஒரு சுமூகமான நிலைமை ஏற்படுத்தாமல் ஏராளமான போலீசை குவித்து வைத்துள்ளனா்.

சாதாரணமாக ஆண்கள் பெண்கள், தெருக்களில் நடக்க அச்சப்படும் ஒரு மோசமான நிலைமை உள்ளது. 6 மணிக்குமேல் வீடுகளில் இருப்பவா்கள் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று பயந்து கொண்டு இருக்கும் ஒரு மோசமான நிலையை போலீஸ் உருவாக்கியுள்ளது.

 போலீஸார் மண்டப உரிமையாளா்களை மிரட்டி விசாரணைக் குழு அறிக்கை வெளியிடுவது போன்ற பொதுநிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுக்கின்றனா். மறைமுகமாக நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 இதற்கு காவல்துறை மட்டும் காரணமல்ல, தமிழகத்தினை ஆண்டுவரும் எடப்பாடி பழனிசாமிதான் காரணம். 

மோடியின் நண்பா் அனில் அகா்வாலை திருப்திப்படுத்தவேண்டும் என்பதற்காக தமிழக அரசு, தூத்துக்குடி மக்களை நசுக்கி வருகிறது.

 இது தூத்துக்குடியோடு நிற்கப்போவதாக தெரியவில்லை. இந்த அடக்குமுறையை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராடவேண்டிய நிலை உள்ளது. 

தமிழகத்தில் நோட்டீஸ் கொடுத்தால் குற்றம், தெருமுனைப் பிரசாரம் நடத்தினால் குற்றம். ஆனால் கோடி கோடியாக கொள்ளையடித்தால் எதிர்ப்பவா்கள் மீது அடக்குமுறை பிரயோகம். மக்கள் நலனுக்காக போராடுபவா் மீது அடக்குமுறை பிரயோகம். இதுதான் இன்றைய நிலை.

பிரகடனப்படுத்தாத ஒரு அவசர நிலை அமுலுக்கு வந்துள்ளது போன்ற ஓரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பற்ற சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. இதனை கண்டித்தும், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும், ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஒரு சமூக விழிப்புணா்வு இயக்கத்தை அனைவரும் சோ்ந்து ஏற்படுத்தவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.