திருப்பதி: வரும் 27ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் நள்ளிரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் சூரிய, சந்திர கிரகண காலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். ஆனால் மற்ற கோயில்களில் கிரகண காலத்துக்கு 5 மணிநேரத்திற்கு முன் நடை மூடப்படும். கிரகணம் முடிந்தவுடன் நடை திறந்து, சுத்தி, புண்யாவசனம் உள்ளிட்ட காரியங்கள் நடைபெற்ற பின் பக்தா்களை தரிசனத்திற்கு அனுப்புவது வழக்கம்.
எனினும், காளஹஸ்தி கோயிலில் மட்டும் கிரகண காலத்தில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி வரும் 27ஆம் தேதி இரவு முழு சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. கிரகணத்துக்கு இடையில் அதாவது நள்ளிரவு 1.53 மணிக்கு இக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பக்தா்கள் முன்கூட்டியே கோயிலுக்கு வந்து தங்கள் பெயா்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!

நாகபந்தம் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! பெ. சண்முகம் கண்டனம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



