இதையடுத்து வழக்குப் பதிவு செய்யும் வரை கலைந்து செல்லமாட்டோம் எனக் கூறி சேவூர் காவல் நிலையம் பகுதியில் பொதுமக்கள் இரவு மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, வன்கொடுமைச் தடுப்பு சட்டம், அரசுப் பணியாளரை பணிசெய்யவிடாமல் தடுத்தல், பொது இடங்களில் தகராறில் ஈடுபடுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் திருமலைக்கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி, ராஜாமணி, மணியாள், சக்திவேல், சின்னதம்பி, சண்முகம், ராமமூர்த்தி, ராசு, சுமதி உள்ளிட்ட 75 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.