தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் - ரஜினிகாந்த்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் நடிகர் ரஜினிகாந்த் செவ்வாய்கிழமை நலம் விசாரித்தார். 

News image
Updated On :31 ஜூலை 2018, 4:03 pm

DIN

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் நடிகர் ரஜினிகாந்த் செவ்வாய்கிழமை நலம் விசாரித்தார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு இயல்பான முதுமை காரணமாக உடல்நலிவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை கடந்த வியாழக்கிழமை முதல் அறிக்கையை வெளியிட்டது. இதையடுத்து, தமிழக துணை முதல்வர் உட்பட அமைச்சர்கள் கோபாலபுர இல்லத்துக்குச் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர். 

இவர்களைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாக கோபாலபுர இல்லத்துக்குச் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்தனர். நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றதால் வெள்ளிக்கிழமை இரவு ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார். 

இதையடுத்து, சனிக்கிழமை அதிகாலை கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து குலாம் நபி ஆசாத், குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் என பலர் தொடர்ச்சியாக நேரில் சென்று நலம் விசாரித்தனர். 

இந்நிலையில், படப்பிடிப்பை முடித்துக்கொண்டு செவ்வாய்கிழமை சென்னை திரும்பும் ரஜினிகாந்த் இரவு 8.45 மணிக்கு காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதி குறித்து நலம் விசாரிப்பதாக கூறப்பட்டது. 

அதன்படி, ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.

இதையடுத்து, ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்,   

"கருணாநிதியின் உடல் நிலை குறித்து நலம் விசாரிக்க வந்தேன். அவர் உறங்கிக்கொண்டிருப்பதால் நேரில் சந்திக்க முடியவில்லை. அங்கு இருந்த அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். என்னால் ஆறுதல் மட்டும் தான் கூறமுடியும். கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.