சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க அறிவிக்கப்பட்டுள்ள நீதிபதி அருணா ஜெகதீசனின் ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை, திங்களன்று துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தில் காவல்துறையால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிபதி அருணா ஜெகதீசனின் ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை, திங்களன்று துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்கட்டமாக திங்களன்று தூத்துக்குடி செல்லும் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்திக்க உள்ளார். பின்னர் அங்கேயே மாவட்ட காவல்துறை கண்கணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
பின்னர் மாவட்ட தலைமை மருத்துவமனை செல்லும் அவர் அங்கு காயம்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்குள் அவரது விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படுமென்று தெரிகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் சசி தரூரின் பாதுகாவலர், ஓட்டுநர் மீது தாக்குதல்! ஒருவர் கைது!
தேனி டூ வாஷிங்டன்! அமெரிக்க தலைநகரின் மேயர் போட்டியில் தமிழ்ப் பெண்!

சிஎஸ்கேவை வீழ்த்திய பிறகு தனுஷ் படக்காட்சியைப் பகிர்ந்த பஞ்சாப்!

'அரசியல் சாசன மோசடி' தேர்தல் நெருக்கடியில் நாடாளுமன்றக் கூட்டம்: ப. சிதம்பரம் கண்டனம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


