ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

தூத்துக்குடியில் போலீஸார் தொல்லை கொடுக்க கூடாது - உயர்நீதிமன்றம்

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தாருக்கு போலீஸார் தொல்லை கொடுக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன் பாதுகாப்புக்காக புதன்கிழமை குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினர்.

Published On :

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100-ஆவது நாள் போராட்டத்தின் போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருநெல்வேலி மாவட்டத்தின் மக்கள் அதிகாரம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "போலீஸார் விசாரணை என்ற பெயரில் இரவு நேரங்களில் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தொல்லை கொடுக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபடாதவர்களை துன்புறுத்துகின்றனர். போராட்டத்தில் தொடர்பு இல்லாத 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தாருக்கு போலீஸார் தொல்லை கொடுக்க கூடாது என்று கூறி உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு மீதான விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.