ஹோா்முஸ் நீரிணை வழியாகச்செல்லும் கப்பல்களுக்கு 20% கட்டணம் வசூல் செய்யவிருந்த தனது முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) திரும்பப் பெற்றார்.
ஹோா்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு அமெரிக்கா இனி பாதுகாப்பு அளிக்கும். ஆனால், அச்செலவினங்களுக்கு ஈடாக அவ்வழியாகக் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு 20 சதவிகித கட்டணம் வசூலிக்கப்படும்’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஜூலை 14) அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த முடிவைத் திரும்பப் பெறுவதாகவும் அதற்குப் பதிலாக வளைகுடா நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளப் போவதாகவும் இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது:
அமெரிக்க ராணுவத்தின் வலிமையால், முன்னெப்போதும் இல்லாத வகையில் எண்ணெய் விநியோகம் தடையின்றி நடைபெறுகிறது. ஹோர்முஸ் நீரிணை ஈரான் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கும் திறந்தே இருக்கும். ஈரானுக்கு மட்டும் அது மூடப்பட்டிருப்பதற்குக் காரணம், அந்த நாட்டின் பொய்யான, தீய நோக்கம் கொண்ட தலைமைத்துவமே. அவர்கள் ஈரானை முழுமையான அழிவை நோக்கிய பாதையில் இட்டுச் செல்கிறார்கள்.
ஈரான் தொடர்புடைய கப்பல்களுக்கு அல்லது அங்கு இருந்து வரும் பொருள்களுக்கான முற்றுகை தொடரும். மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் நான் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 20 சதவிகிதம் கட்டணத்துக்கு பதிலாக வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் மேற்கொள்ளவிருக்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளேன் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய தாக்குதல்கள் தற்போதுவரை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
US President Donald Trump withdrew his decision to levy a 20% fee on ships passing through the Strait of Hormuz.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹோா்முஸில் கப்பல்களுக்கு பாதுகாப்பு: 20% கட்டணம் வசூல்!
ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்கிறது! டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்றி நிர்வகிப்போம்: டொனால்ட் டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க சுங்கக் கட்டணம் இல்லை! ஈரான் உறுதி அளித்ததாக டிரம்ப் பதிவு!
விடியோக்கள்

வெளியானது இதயம் முரளி ஸ்னீக் பீக்!

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK



