இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்கிறது! டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணை திறந்தேதான் உள்ளது என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளது பற்றி...

News image

ஹோர்முஸ் நீரிணை | டொனால்ட் டிரம்ப் - சித்திரிப்பு

Updated On :13 ஜூலை 2026, 9:50 pm IST

ஹோர்முஸ் நீரிணை திறந்தேதான் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஜூலை 13) தெரிவித்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தால் ஏற்கெனவே மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.

இதனால் தாக்குதல்கள் இருபுறமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரானின் புரட்சிகரக் காவல்படை அறிவித்தது.

இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

ஈரான் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்கிறது, திறந்தே இருக்கும். ஈரான் மீதான முற்றுகையை மீண்டும் அமல்படுத்துகிறோம். ஈரானின் கப்பல்கள் உள்ளே நுழைந்தால் தடுப்போம்.

மற்ற அனைத்து நாடுகளும் ஹோர்முஸ் நீரிணையை தடையின்றி பயன்படுத்தலாம். இனிமேல், அமெரிக்கா "ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாவலர்" என்று அழைக்கப்படும்.

அந்த வகையில், ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்கவும் இயக்கவும் தேவையான அனைத்து செலவுகளுக்கும் அதன் வழியே செல்லும் பொருள்களுக்கு 20 சதவிகிதம் வரி விதிக்கப்படும். இதற்கான நடைமுறை உடனடியாகத் தொடங்கப்படும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Summary

US President Donald Trump stated on Monday (July 13) that the Strait of Hormuz remains open.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.