
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் 22-ஆம் தேதி நடைபெற்ற பேரணி போராட்டத்தின் போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதில், காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை ரஜினிகாந்த் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது சந்தோஷ் எனும் இளைஞர் ஒருவர் நீங்கள் யார் என்று ரஜினியை பார்த்து கேட்பார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.
இந்நிலையில், அவர் தற்போது அப்படி கேட்டதற்கான விளக்கத்தை விடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவில் அவர் கூறியதாவது,
"நான் அவரை அப்படி கேட்டதன் நோக்கமே வேறு. ரஜினி என்று சொன்னாலே சமூகத்தில் ஒரு மதிப்பு. அதனால், அந்த 100 நாள் போராட்டத்தில் பங்கேற்றிருந்தால் எங்களுக்கு பலமாக இருந்திருக்கும். அதனால், வருத்தத்தில் தான் நான் அதனை கேட்டேன். அதுவும் மக்களுக்காக என்ற உரிமையில் தான் அப்படி கேட்டேன்" என்று விளக்கமளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.