தருமபுரி சட்டக் கல்லூரிக்கு ரூ.77 கோடியில் நிரந்தரக் கட்டடம்

தருமபுரி அரசு சட்டக் கல்லூரிக்கென ரூ.77.07 கோடியில் புதிதாக நிரந்தரக் கட்டடம் கட்டப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார்.
Updated on
1 min read

தருமபுரி அரசு சட்டக் கல்லூரிக்கென ரூ.77.07 கோடியில் புதிதாக நிரந்தரக் கட்டடம் கட்டப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்ட அறிவிப்புகள்:
2017-18-ஆம் கல்வியாண்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட தருமபுரி அரசு சட்டக் கல்லூரிக்கென காரிமங்கலம் வட்டத்தில் ரூ.77.07 கோடி மதிப்பீட்டில் மாணவ மற்றும் மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தரக் கட்டடம் கட்டப்படும்.
கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியில் கருத்தரங்குகள், சிறப்பு சட்ட வகுப்புகள் கலை நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழா மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய கலையரங்கம் மற்றும் நூலகக் கட்டடம் சுமார் 4,254 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.10.40 மோடி மதிப்பீட்டில் கட்டப்படும். இதன் மூலம் 1,440 மாணவர்கள் பயன்பெறுவர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com