ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மூன்று புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூன்று மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

News image
Updated On :5 ஜூன் 2018, 8:46 pm

DIN

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூன்று மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இது குறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், புதுக்கோட்டை ஆலங்குடி, காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றம் ஆகிய இடங்களில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. 
விதிகளை மீறும் வாகனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் காளிக்கோயில் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு சோதனைச் சாவடிகளையும், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
காஜிக்களுக்கு மதிப்பூதியம்: தமிழகத்தில் மாவட்ட காஜிக்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் இஸ்லாமிய திருமணங்களைப் பதிவு செய்து சான்றிதழ் வழங்குவது, இஸ்லாமிய விழாக்கள், கிரியைகளை முன்னின்று நடத்துவது போன்ற பணிகளைச் செய்து வருகின்றனர். அவர்களுக்கான பணிகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில், மாவட்ட காஜிக்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000 மதிப்பூதியம் வழங்க அரசு உத்தரவு வெளியிடப்பட்டது. 
2016-ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் மாவட்ட காஜிக்களுக்கு முன்தேதியிட்டு மதிப்பூதியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
அமைச்சர்கள் நிலோபர் கபில், எஸ்.வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வக்ஃப் வாரியத் தலைவர் அன்வர் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.