தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரூ. 60 லட்சம் மதிப்புள்ள 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

கோவையில் உள்ள தனியார் குடியிருப்பில் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள பழைய 1000 ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட பழைய செல்லாத ரூபாய் நோட்டுகள்.
Updated On :5 ஜூன் 2018, 8:12 pm

DIN

கோவையில் உள்ள தனியார் குடியிருப்பில் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள பழைய 1000 ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை, பீளமேடு அருகே தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வெங்கடேஷ் என்பவருக்குச் சொந்தமான குடியிருப்பு உள்ளது. காலியாக உள்ள தனது குடியிருப்பை வாடகைக்குவிட முடிவு செய்தார். இதனை அறிந்த ஒருவர் வெங்கடேஷை திங்கள்கிழமை அணுகியுள்ளார். அப்போது, அவருடன் 6 பேர் காரில் வந்துள்ளனர். வீட்டுக்கான முன் பணத்தைக் கொடுத்த நபர் தன்னுடன் வந்த நபர்களுடன் வீட்டிற்குள் சென்றுள்ளார். வீட்டிற்குள் ஒரு பையை வைத்துவிட்டு அங்கிருந்து அவர்கள் வேகமாக காரில் திரும்பி விட்டனர். 
அவர்கள் வேகமாகச் சென்றதைப் பார்த்த வெங்கடேஷ் சந்தேகம் அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, அங்கு பை வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது, தன்னுடன் வந்தவர்களை வழி அனுப்பி வைத்துவிட்டு வருவதாகக் கூறியுள்ளார். ஆனால், அவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
இதையடுத்து வெங்கடேஷ் செவ்வாய்க்கிழமை வீட்டுக்குள் சென்று பையைத் திறந்து பார்த்துள்ளார். பையில் ரூ. 60 லட்சம் மதிப்பு 1000 ரூபாய் பழைய நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து பீளமேடு போலீஸாருக்கு வெங்கடேஷ் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். 
விசாரணையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் என்பவர் வீடு வாடகைக்குக் கேட்டு வந்ததாக வெங்கடேஷ் தெரிவித்தார். அவர் அளித்த தகவலின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.