2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேசனிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

துப்பாக்கிச் சூட்டின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்துகிறது.

News image
Updated On :5 ஜூன் 2018, 6:12 am

DIN


மதுரை: துப்பாக்கிச் சூட்டின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்துகிறது.

13 பேரை பலிகொண்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் தேசிய மனித உரிமைகள் ஆணையம், துப்பாக்கிச் சூட்டின் போது தூத்துக்குடியின் மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேசனிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் இன்று மதுரைக்கு வரவழைக்கப்பட்டார். மதுரை விமான நிலையத்தில் தேசிய மனித உரிமைகள் விசாரணை ஆணைய எஸ்.பி. பவுல் தத்தா பிரசாத் விசாரணை நடத்தி வருகிறார். மதுரை டிஜிபி பிரதீப் குமாரும் உடன் உள்ளார்.

இந்த விசாரணையின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது, மாவட்ட ஆட்சியர் எங்கிருந்தார். அவருக்கு உரிய தகவல் கிடைக்கப் பெற்றதா? அது தொடர்பாக அவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று கேள்விகள் எழுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து வெங்கடேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.