காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜூன் 2018, 8:15 pm

DIN

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பொது மேலாளராக பணியாற்றிய ஏ. அன்பு ஆப்ரஹாம், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதோடு, அவருக்கு மேலாண் இயக்குநர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சேலம், மதுரை, விழுப்புரம், சென்னை, கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வந்த பொது மேலாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு அவர்களுக்கும் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.