தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்களை வழக்கில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்களை, அது தொடர்பான  வழக்கில் சேர்க்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :6 ஜூன் 2018, 9:41 am

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்களை, அது தொடர்பான  வழக்கில் சேர்க்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பல்வேறு அரசியல் தலைவர்கள் அடுத்த தினமே பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அரசு சார்பில் அமைச்சர்கள் 144 தடை உத்தரவு நீக்கப்பட்ட பிறகு நேரில் சென்று ஆறுதல் அளித்தனர். 

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. மேலும் தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் புபுல் தத்தா பிரசாத், ராஜ்பீர்சிங், லால்பகர், நிதின்குமார், அருண் தியாகி ஆகியோர் விசாரணை நடத்துவதற்காக தூத்துக்குடிக்கு வந்துள்ளனர்.

முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், மற்றும்  டிஜிபி ஆகியோர் மீது கொலை வழக்கு பதியக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உத்தரவிட்ட இரு துணை வட்டாட்சியர்களையம், அது தொடர்பான  வழக்கில் சேர்க்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று நடந்த குறிப்பிட்ட குறிப்பிட்ட அந்த வழக்கு விசாரணையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எதிர் மனுதாரர்களாக வட்டாட்சியர்களை சேர்க்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.