எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

'துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஜூன் 30 வரை பிரமாண வாக்குமூலம் அளிக்கலாம்'

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இம்மாதம் 30 -ஆம் தேதிவரை பொதுமக்கள் உள்ளிட்டோர் பிரமாண வாக்குமூலம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :8 ஜூன் 2018, 2:33 am IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இம்மாதம் 30 -ஆம் தேதிவரை பொதுமக்கள் உள்ளிட்டோர் பிரமாண வாக்குமூலம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்தச் சம்பவம் தொடர்பான ஒருநபர் விசாரணை ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடியில் கடந்த 22 -ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் போராட்ட சம்பவங்கள் குறித்து மனுக்கள், பிரமாண வாக்குமூலத்தை இம்மாதம் 30 -ஆம் தேதிவரை அளிக்கலாம்.
தூத்துக்குடி தெற்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விசாரணை ஆணைய முகாம் அலுவலகம், சென்னை பி.எஸ். குமாரசாமி ராஜா சாலையில் உள்ள ஒரு நபர் விசாரணை ஆணைய அலுவலகத்தில் பிரமாண வாக்குமூலம் அளிக்கலாம். மேலும், விவரங்களுக்கு, 044 - 2495 8185, 0461 - 2321729 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
விசாரணை ஆணையத்தில் பெறப்படும் அனைத்து மனுக்கள், பிரமாண வாக்குமூலம் தொடர்பாக, குறிப்பிட்ட நாளில் சம்பந்தப்பட்டோரிடம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விசாரணை செய்து தகவல் பெறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.