ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு தடை கோரி மனு: இன்று விசாரணை

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை முதல் மேற்கொள்ள உள்ள வேலைநிறுத்தத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On :8 ஜூன் 2018, 1:36 am IST

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை முதல் மேற்கொள்ள உள்ள வேலைநிறுத்தத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆத்தூரைச் சேர்ந்த செல்வராஜன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 8) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். 
தமிழகம் முழுவதும் 4,750 ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். கடந்த 2014, 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் தீபாவளி போனஸ் கோரிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே சட்ட விரோதம் எனக் கூறி தடை செய்தது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் விபத்தில் காயம் அடைவோருக்கு அவசர சிகிச்சை அளிக்க முடியாத நிலை உருவாகி உயிரிழப்பு நேரிட வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
முறையீடு: இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் முறையிடப்பட்டது. இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.