தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவைக் கைது செய்தது ஏன் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசியது: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்குத் தனி அறை உண்டு. அவரைச் சந்திக்கப் பலர் வருவர். ஸ்டாலினைச் சந்திக்க அய்யாக்கண்ணு அனுமதி பெற்றிருந்தார். அதைத் தடுக்கும் வகையில் அவரை காவலர்கள் கைது செய்து வடபழனி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர் என்றார்.
பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம்: அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டது பற்றிய பிரச்னையை துரைமுருகன் அவைக்குக் கொண்டு வந்தார். சென்னையில் எந்தெந்த இடத்தில் போராட்டங்கள் நடத்துவது என்பது குறித்து அறிவிப்பு உள்ளது. அதன்படி பூந்தமல்லி, மாதவரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், வடபழனியில் அவர் துண்டுப் பிரசுரம் அளித்தார். அதனால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்டாலினைச் சந்திக்க வந்தார் என்பதற்காகக் கைது செய்யப்படவில்லை என்றார்.
வடபழனியில் துண்டுப் பிரசுரம் வழங்கியதற்காக கைது செய்யப்பட்ட அய்யாக்கண்ணு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









