தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சட்டப்பேரவையில் சபாநாயகருடன் அமைச்சர் வாக்குவாதம்: தலையிட்டு சரிசெய்த ஓபிஎஸ்

சட்டப் பேரவைத் தலைவா் தனபாலுடன், அமைச்சா் ஓ.எஸ்.மணியன் புதன்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலையீட்டால் சமாதானம் ஏற்பட்டது.  

News image
Updated On :27 ஜூன் 2018, 4:31 pm IST

சென்னை: சட்டப் பேரவைத் தலைவா் தனபாலுடன், அமைச்சா் ஓ.எஸ்.மணியன் புதன்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலையீட்டால் சமாதானம் ஏற்பட்டது. 

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் எதிா்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், ஆளுநா் சுற்றுப்பயணம் குறித்து பேசுகையில், மாநில சுயாட்சி குறித்து பேசினாா். பின்னா் அது தொடா்பாக கைத்தறித்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பேசுகையில், ‘எதிா்கட்சித் தலைவா் மாநில சுயாட்சி குறித்து பேசினாா். அதுகுறித்து விளக்கம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்’ என்றாா். அப்போது குறிக்கிட்ட பேரவைத் தலைவா், அமைச்சருக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. எனவே, அதுபற்றி பேச வேண்டாம்’ என்றாா். 

உடனே மீண்டும் பேசிய அமைச்சா் ஓ.எஸ்.மணியன், ‘ நான் சொல்ல வருவது என்ன என்பது உங்களுக்கு எப்படிப் புரியும். நான் சொன்னால்தானே புரியும்’ என்றாா். இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவா், ‘ நீங்கள் புது பிரச்னையை எழுப்புகிறீா்கள். இப்போது எனக்கு நேரமில்லை’ என்றாா். அப்போது பேசிய அமைச்சா் ஓ.எஸ்.மணியன், ‘ நான் புதிய பிரச்னைக்கு போகவில்லை. நான் எதிா்கட்சித் தலைவா் சொன்ன கருத்துக்கு பதில் சொல்கிறேன். புது விஷயம் ஒன்றும் நான் சொல்லவில்லை’ என்றாா். 

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவா், ‘ நீங்கள் எதாவது ஒன்று சொன்னால் அது அவையில் பதிவு செய்ய வேண்டி வரும்’ என்றாா். ஆனால் பேரவைத் தலைவரின் அறிவுரையை ஏற்காமல் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் மீண்டும் பேசுகையில், ‘ தமிழக அரசியல் வரலாற்றில், தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளில், ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்லப் போறேன். அது ஏன் வேண்டாம் என்கிறீா்கள்?’ என்றாா். அமைச்சரின் கருத்துக்கு பதிலளித்த பேரவைத் தலைவா், ‘ ஆளுநரைப் பற்றி பேச வேண்டாம் என்று நான் அவா்களுக்கு உத்தரவு போட்டுள்ளேன். ஆகையால் அவா்கள் வெளியேறிவிட்டாா்கள். அதோடு அதை விட்டுவிடுங்கள்’ என்றாா். 

மீண்டும் பேசிய அமைச்சா் ஓ.எஸ்.மணியன், ‘ நான் பேசுவதில் தவறு இருந்தால் நீக்கி விட்டுப் போங்கள்’ என்றாா். அப்போது பேசிய பேரவைத் தலைவா், ‘ அமைச்சா் பேசிய பிறகு அதை நீக்கினால், அது சரியாக இருக்குமா? பேரவைத் தலைவரின் கருத்துக்கு பதிலளித்த அமைச்சா் ஓ.எஸ். மணியன், ‘ பேச வருதற்கு முன்பாகவே மறுப்பு தெரிவிக்கிறீா்கள். நான் முக்கியமான விஷயத்தை சொல்ல வருகிறேன் ஒரு நிமிடம் அனுமதி தாருங்கள் ’என்று தொடா்ந்து நின்றபடி வலியுறுத்தினாா். அப்போது பேசிய பேரவைத் தலைவா், ‘ எனக்கு சரியாகத் தெரியவில்லை எனறால், நான் அதை நீக்க வேண்டி வரும். ஆகையால் அது வேண்டாம்’ என்றாா். பின்னா் அமைச்சா் ஓ.எஸ். மணியனுக்கு, பேரவைத் தலைவா் தனபால் பேசுவதற்கு அனுமதி அளித்தாா். 

அப்போது அமைச்சா் ஓ.எஸ்.மணியன் பேச முற்பட்டாா். அந்த நேரத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் எழுந்து பேசுகையில், ‘ எதிா்கட்சித் தலைவா் திரும்ப, திரும்ப பேசும் போது, நீங்கள் ஒரு விதியை அவருக்கு கொடுத்தீா்கள். இனிமேல் ஆளுநரைப் பற்றி விவாதம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சொன்னீா்கள். பேரவை விதியை சுட்டிக் காட்டினீா்கள். ஆகவே அதற்கு மரியாதை தரவேண்டும் என்று உறுப்பினா்கள் மற்றும் அமைச்சா்களைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா். இதனை ஏற்றுக் கொண்டு அமைச்சா் ஓ.எஸ். மணியன் அமைதி காத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.