தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். பிடிஎஸ் கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
அரசு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வுக்குத் தகுதி பெற்ற 25,417 மாணவர்களில் 2,939 பேர் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் அரசு இடங்களுக்கு 28,067 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட 181 விண்ணப்பங்கள் கண்டறியப்பட்டன. தகுதியில்லாத 2,469 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தகுதிவாய்ந்த மொத்த விண்ணப்பங்கள் 25,417 ஆகும்.
சென்னை முதலிடம்: அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 2,939 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1390, திருவள்ளூர் 1,344, சேலம் 1317, வேலூர் 1256, மதுரை 1251, கோவை 1158, திருநெல்வேலி 1155, திருச்சி 1144, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 975 பேர் தகுதி பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து 148 பேர், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 204 பேர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 211 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
பிற மாநிலங்கள்: தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டு ஆனால் பிற மாநிலங்களில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களில் கேரளத்தில் இருந்து 52, ஆந்திரத்தில் இருந்து 18 பேர், கர்நாடகத்தில் இருந்து 52, பிற மாநிலங்களில் இருந்து 34 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாட்ஸ்ஆப் சேனல் பதிவுகளை பார்ப்பது எத்தனை பேர்? அறிவது எப்படி? பயன்கள் என்னென்ன?

விம்கோ நகர் - மாதவரம் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் புதிய தடம்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழை!
ஹோர்முஸ் தொடர்பாக ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தை! அமெரிக்கா புறக்கணிப்பு!
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay


