மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கருணாநிதியின் மகனை மீட்டுத் தரக்கோரி மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவை மீட்டுத்தரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,

News image
Updated On :1 மார்ச் 2018, 8:03 pm

DIN

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவை மீட்டுத்தரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர், கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர் ஆகியோர் இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மு.க.முத்துவின் மகள் ஷீபாராணி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விவரம்:
எனது தந்தை மு.க.முத்துவுக்கும் எனது தாயாருக்கும் கடந்த 1988-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1991 - ஆம் ஆண்டு குழந்தையாக பிறந்தேன். பின்னர் குடும்பத்துடன் நாங்கள் ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் வசித்து வந்தோம். அப்போது அங்கு வந்த எனது அப்பாவின் மூத்த மனைவியின் மகனான அறிவுநிதி மற்றும் அவருடன் வந்த அடியாள்கள், எனது அப்பாவையும், அம்மாவையும் தாக்கி வீட்டை அபகரித்துக் கொண்டனர். இதனையடுத்து நானும் , எனது அம்மாவும் ஆவடியில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தோம். 
இதனிடையே, கடந்த 2015 -ஆம் ஆண்டு எனது அப்பாவை திருவாரூரில் சந்தித்தேன். அதன் பின்னர் அவரைச் சந்திக்கவிடாமல் அறிவுநிதி தடுத்து வருகிறார். 
கடந்த 3 ஆண்டுகளாக எனது அப்பாவை பார்க்கவில்லை. அவரது நிலை குறித்தும் தெரியவில்லை. எனவே, எனது அப்பாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர், கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர் ஆகியோர் இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.