தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்

விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :1 மார்ச் 2018, 8:08 am

DIN

விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அளித்த புகார்களை அடிப்படையாக வைத்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரித்தது. 

அப்போது கிரீன்வேஸ் சாலையில் இருந்து நீதிமன்றம் வரை தான் பேனர்கள் இல்லை எனக் கூறிய நீதிபதி சென்னையின் மற்ற அனைத்து இடங்களிலும் பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் போக்குவரத்து, மக்களுக்கு இடையூறாக இருக்கும் பேனர்களை அகற்றாமல் காவல்துறை என்ன செய்கிறது? பேனர்களை அகற்றாமல் இன்னும் ஏன் அனுமதி தரப்படுகிறது? பேனர்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்தார்.

இதையடுத்து தமிழக அரசு, மாநகராட்சி, காவல்துறை ஆகியவை வரும் 5ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.