மதுரையில் கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் தொடர்புடைய ரவுடிகள் முத்து இருளாண்டி (எ) மந்திரி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய 2 பேர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மதுரை சிக்கந்தர்சாவடியில் உள்ள ஒரு வீட்டில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர்கள் இருவரையும் போலீஸார் ரகசியமாக சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றபோது அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியைக் கொண்டு தாக்க முயன்றதால் தற்காப்புக்காக போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் ரவுடிகள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் கூறியதாவது:
கொலை குற்றம் தொடர்பாக முத்து இருளாண்டி (எ) மந்திரி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்ய முயன்ற போது, அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியைக் கொண்டு சுட முயன்றனர். எனவே தற்காப்பு காரணமாக போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் ரவுடிகள் இருவரும் சுடப்பட்டனர்.
செல்லூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் இவர்களைப் பிடிக்க முயன்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் 2 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ரவுடிகளிடம் இருந்து முதல்கட்டமாக ஒரு துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. மற்றவை விசாரணைக்குப் பின்னர் தெரிவிக்கப்பட்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


