வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

முதுநிலை படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு: அரசு மருத்துவர்கள் போராட்டம்

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் தங்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் வியாழக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :1 மார்ச் 2018, 8:04 pm

DIN

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் தங்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் வியாழக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
தமிழக அரசு மருத்துவர்களுக்கும் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், நிகழாண்டு நடைபெறும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பட்டையை அணிந்து பணிக்குச் சென்றனர். இதுதொடர்பாக சங்கத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் கூறும்போது, 'கோரிக்கைகள் நிறைவேறும் வரை நூதன வழிகளில் தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும்' என்று தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.