2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பிடர் கொண்ட சிங்கமே பேசு: கருணாநிதிக்காக வைரமுத்து வாசித்த உணர்ச்சிக் கவிதை! (விடியோ) 

உடல்நலக் குறைவால் ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்காக 'பிடர் கொண்ட சிங்கமே பேசு' என்று தொடங்கும் கவிதையை, கவிஞர் வைரமுத்து வாசித்துக் காட்டும் விடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2018, 8:38 am

DIN

சென்னை: உடல்நலக் குறைவால் ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்காக 'பிடர் கொண்ட சிங்கமே பேசு' என்று தொடங்கும் கவிதையை, கவிஞர் வைரமுத்து வாசித்துக் காட்டும் விடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

மூச்சுத் திணறல் காரணமாக பாதிக்கப்பட்ட கருணாநிதி டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டு, கோபாலபுரம் இல்லத்திலேயே கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓய்வில் இருந்து வருகிறார். அந்தக் கருவியை அகற்றுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர். கருணாநிதிக்குப் பேச்சு பயிற்சியும் அவ்வப்போது கொடுத்து வருகின்றனர்.

கடந்த 1-ஆம் தேதி திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாளன்று  கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். ஸ்டாலின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு அவருக்கு கருணாநிதி வாழ்த்துக் கூறினார். அவருடன் உதயநிதியம் கருணாநிதியிடம் உரையாடும் விடியோ  காட்சிகள் வெளியாகி, திமுக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்காக 'பிடர் கொண்ட சிங்கமே பேசு' என்று தொடங்கும் கவிதையை, கவிஞர் வைரமுத்து நேரில் அவருக்கு வாசித்துக் காட்டும் விடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை கவிஞர் வைரமுத்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இது அனைவராலும் ஆர்வமாக பார்க்கப்பட்டு வருகிறது.

விடியோ: 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.