போடி: தேனி மாவட்டம் போடி அருகே ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டுள்ள 40 கல்லூரி மாணவிகளை மீட்க வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது குரங்கணி மலை. கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 40 பேர் இங்கு மலையேறும் பயிற்சிக்காக வந்திருந்தனர்.
அவர்கள் ஞாயிறன்று மலை ஏறுவதற்காக குரங்கணி மலையில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டனர். அவர்கள் உள்ளே சென்ற பின்னர் எதிர்பாராத விதமாக திடீர் என்று காட்டுத்தீ பிடித்துக் கொண்டது.
இதனால் அவர்கள் தங்கியிருந்த முகாமில் இருந்து கீழே சமவெளிப்பகுதிக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிக்கிக் கொண்டுள்ள 40 மாணவிகளை காப்பற்றுவதற்காக வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் ஊர்மக்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியுள்ளனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர்,காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தகவல் கேள்விப்பட்ட உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அங்கு விரைந்துளார்.
அத்துடன் மாவட்டம் முழுவதும் இருந்து ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதிகளும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் காட்டுத்தீ தொடர்ந்து வருவதால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு வாக்காளா்கள் பழி தீா்க்க வேண்டும்: மம்தா பானா்ஜி
அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது

நியாயமான, சுதந்திரமான, அச்சமற்ற தோ்தல்கள்: பிரதமா் மோடி உறுதி!

சேமிப்பு மையங்களில் எல்பிஜி சிலிண்டா் நேரடி விற்பனைக்குத் தடை! தில்லி அரசு உத்தரவு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


