கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்த ஆட்சியை கவிழ்ப்பது  கடினமான வேலை கிடையாது: எச்சரிக்கை விடுத்த துரைமுருகன்! 

தற்பொழுது நடைபெற்று வரும் இந்த அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது ஒன்றும் கடினமான வேலை கிடையாது என்று திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன்  எச்சரிக்கை விடுத்துள்ளார். 

News image
Updated On :25 மார்ச் 2018, 9:02 am

DIN

ஈரோடு: தற்பொழுது நடைபெற்று வரும் இந்த அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது ஒன்றும் கடினமான வேலை கிடையாது என்று திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன்  எச்சரிக்கை விடுத்துள்ளார். 

திமுகவின் மண்டல மாநாடு ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சரளை அண்ணா நகர் பெரியார் திடலில் சனிக்கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடானது சமூக நீதி மற்றும் மதநல்லிணக்க மாநாடாக நடைபெறுகிறது.

மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது. கட்சி நிர்வாகிகள் பல்வேறு தலைப்புகளில் பேசி வருகிறார்கள். அந்த வரிசையில் திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:

தற்பொழுது நடைபெற்று வரும் இந்த அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது ஒன்றும் கடினமான வேலை கிடையாது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக என்னும் கட்சி இரண்டாக உடையும் என்பதனை முன்கூட்டியே கணித்துக் கூறியவர் திமுக தலைவர் கருணாநிதி.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா-ஜானகி இருந்த போதே அந்த விவகாரத்தில் தலையிட மறுத்தவர் திமுக தலைவர் எதிர்க்கட்சி என்பது எதிர்த்துப் பேசுவது என்பது மட்டுமல்ல, தேவைப்பட்டால் சரியான ஆலோசனை வழங்குவதற்கும் தான்.

இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.