தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஏர் போர்டுக்கு நடக்க வேண்டாம்: வந்துவிட்டது வால்கலேட்டர்

மெட்ரோ ரயில் நிலையம் மூலமாக சென்னை விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் 602 மீட்டர் தூரத்துக்கு வால்கலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :26 மார்ச் 2018, 11:01 am


சென்னை: மெட்ரோ ரயில் நிலையம் மூலமாக சென்னை விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் 602 மீட்டர் தூரத்துக்கு வால்கலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக பொருத்தப்பட்ட இந்த வால்கலேட்டர் வசதியை விமானப் போக்குவரத்துத் துறை செயலர் ஆர்.என். சௌபே முன்னிலையில், தமிழக முதன்மைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று துவக்கி வைத்தார்.

602 மீட்டர் தூரத்துக்கு 12 வால்கலேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏராளமான பயணிகள் பயனடைவார்கள். 

விரைவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் செக்-இன் கவுண்டர்களும் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள், மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்ல கார் அல்லது ஆட்டோ பிடிக்கும் நிலை இருந்தது. ஆனால், தற்போது வால்கலேட்டரால் அந்த சிக்கல் தீர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.