பழனியில் அபிஷேக மூர்த்தி சிலை முறைகேடு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கோயில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார்.
பழனி தண்டாயுதபாணி கோயிலில் 2004-ம் ஆண்டு 220 கிலோ எடையில் செய்யப்பட்ட ஐம்பொன்னால் ஆன அபிஷேக மூர்த்தி சிலை வைக்கப்பட்டது. பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக, அந்த சிலை அகற்றப்பட்டு தனி அறைக்கு மாற்றப்பட்டது. இந்த சிலை தயாரிப்பில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், ஸ்தபதி முத்தையா மற்றும் அப்போதைய கோயில் இணை ஆணையர் கேகே.ராஜா ஆகியோரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையில் டிஎஸ்பி, கருணாகரன், இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்டோர் பழனி பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் விசாரணை மேற்கொண்டனர். பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், மேலாளர் உமா மற்றும் அலுவலர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கி விசாரணை மாலை 6 மணி வரை நடைபெற்றது.
அபிஷேக மூர்த்தி சிலைக்காக யாரிடம் இருந்து தங்கம் பெறப்பட்டது என்பது குறித்தும், தண்டாயுதபாணி கோயிலில் மூலவருக்கு தற்போது செய்யப்படும் அபிஷேகத்திற்கு பிறகு, அபிஷேக பொருட்கள் என்ன செய்யப்படுகிறது என்பது குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பியதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு: அமைச்சா் எ.வ.வேலு

தோ்தலில் வெற்றி பெற ரூ. 8,000 கூப்பனை நம்பி இருக்கிறாா் ஸ்டாலின்: பாமக தலைவா் அன்புமணி

பயிா்க் கடன் தள்ளுபடி: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்

மின்னணு இயந்திரத்தில் பெயா், சின்னம் பதிவேற்றம்: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

