ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

கடந்த காலங்களைவிட தற்போது உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

News image
Updated On :29 மார்ச் 2018, 2:22 am

கடந்த காலங்களைவிட தற்போது உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
திருச்சி சாத்தனூர்,  அய்மான் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற 15 ஆவது பட்டமளிப்பு விழாவில்  பங்கேற்று, 214 பேருக்கு பட்டங்களை வழங்கி அவர் மேலும் பேசியது: நாடு முழுவதும் சுமார் 800 பல்கலைக்கழகங்கள், 40,000 கல்லூரிகள் உள்ளன.  தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்து  உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை கடந்தாண்டுகளை விட  45 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகளிர் 50 சதவிகிதம் பேர் உள்ளனர்.   
தமிழகத்தில் ஆசிரியர் - மாணவர்களின் விகிதாச்சாரம் 1-க்கு 30 என்ற அளவில் உள்ளது. இன்றைய நிலையில் உலகின் மிகப்பெரிய உயர்கல்வி அமைப்பு இந்தியாவில் உள்ளது. இதில்,  சுமார் 3 முதல் 4 கோடி இளைஞர்கள் பயின்று வருகின்றனர் என்பது நமக்கு பெருமை.  கல்வி கற்பது மட்டுமே மாணவ, மாணவியருக்கு மேன்மை தராது, எந்த  செயலையும் அறிவுப்பூர்வமாக செயல்படுத்துவது அவசியம்.
இஸ்லாத்தில் கல்வியின் பெருமை சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.  அதுபோலவே இந்து மதம் மட்டுமின்றி கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து மதங்களின் நூல்களுமே கடவுள் வழிபாடு,  இறைவனுக்கு பணிதல், கல்வி உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கின்றன என்றார் அவர்.
நிகழ்வில், கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர் ஜெய்லானி சம்சுதீன்,  துணைத்தலைவர் எச். ஹசன் அகமது, செயலாளர்  எம். ஒய். ஹபிபுல்லா,  பொருளாளர் கே.எம்.ஐ. அகமதுகுத்புதீன்ராஜா, தாளாளர் எம்.எம். ஷாகுல் ஹமீது, முதல்வர் வி. சுபத்ரா, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 
பட்டம் பெற்றவர்கள் : இளங்கலை பிரிவில் 231, முதுகலை பிரிவில் 16 என மொத்தம் 247 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், இளங்கலையில் 9, முதுகலையில் 2 என 11 மாணவியர் பல்கலை தரவரிசையில்  இடம்பிடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.