காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து, தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள காந்தி - இர்வீன் பாலத்தில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மோடி அரசு தமிழகத்தை வஞ்சிக்கக் கூடாது; எடப்பாடி பழனிசாமி அரசு இனத் துரோகம் செய்யக் கூடாது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சாலை மறியலால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இப்போராட்டத்துக்குத் தலைமை வகித்த குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் செய்தியாளர்களிடம் கூறியது:
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தும் மோடி அரசு, நயவஞ்சகமாகத் தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. வாரியம் அமைக்கப்படாவிட்டால் பாஜக மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தைத் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால் பதவி விலக வேண்டும். தமிழக மக்கள் பக்கம் நின்று தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
கருப்புக் கொடி போராட்டம்: இதனிடையே, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, திருவாரூர் அருகேயுள்ள கூடூரில் கடைகள், வீடுகளில் கருப்புக் கொடி கட்டி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டக்குழுவினர் கூறும்போது, 'தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை மீட்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படாவிட்டால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி பெரிய போராட்டம் நடத்தப்படும்' என்றனர் அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாத எண்கணித பலன்கள் – 8

மே மாத எண்கணித பலன்கள் – 7

மே மாத எண்கணித பலன்கள் – 6

மே மாத எண்கணித பலன்கள் – 5
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


