ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சிபிஎஸ்இ தேர்வின் மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்டது

வினாத்தாள் வெளியான விவகாரத்தின் மூலம் சிபிஎஸ்இ தேர்வின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை தகர்ந்துள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

News image
Updated On :29 மார்ச் 2018, 8:14 pm

வினாத்தாள் வெளியான விவகாரத்தின் மூலம் சிபிஎஸ்இ தேர்வின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை தகர்ந்துள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியாகி இருப்பது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்விமுறையின் தோல்விக்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு. மறுதேர்வு என்பது 28 லட்சம் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் இழைக்கப்படும் அநீதி மட்டுமல்லாமல், தேசிய கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக தகர்ப்பதாகும். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.