மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முதுமலை புலிகள் காப்பகத்தில் 45 நாள்களுக்குப் பிறகு யானை சவாரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் 45 நாள்களுக்குப் பிறகு யானை சவாரி வியாழக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.

Updated On :29 மார்ச் 2018, 8:04 pm

முதுமலை புலிகள் காப்பகத்தில் 45 நாள்களுக்குப் பிறகு யானை சவாரி வியாழக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 45 நாள்களாக வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெற்றது. இதன் காரணமாக யானை சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. புத்துணர்வு முகாம் நிறைவு பெற்றதை அடுத்து வியாழக்கிழமை முதல் யானை சவாரி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 
மகாவீர் ஜயந்தி, புனித வெள்ளி, பங்குனி உத்திர திருவிழா ஆகியவற்றை ஒட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் முதுமலைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் யானை சவாரி மேற்கொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.