சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக பதவிகளைத் தியாகம் செய்ய அரசியல்வாதிகள் தயாராக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெள்ளியன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தங்கள் பதவிகளைத் தியாகம் செய்ய அரசியல்வாதிகள் தயாராக இருக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழக அரசு தியாகம் செய்ய வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பதிவுகளை ராஜினாமா செய்தால் நன்றாக இருக்கும் .
காவிரி விவகாரத்தில் அரசியல் ரீதியான சரியான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தமிழக அரசு அளிக்க வேண்டும்.
காவிரி பிரச்னைக்காக திமுக கூட்டவுள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் யாரேனும் பங்கேற்க வாய்ப்புண்டு.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


