உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

பிரதமரை தனித்துச் சென்று சந்திப்பது சரியாக இருக்காது: தில்லியில் முதல்வர் பழனிசாமி பேட்டி 

காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை தனித்துச் சென்று சந்திப்பது சரியாக இருக்காது என்று தில்லியில் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:24 pm IST

புதுதில்லி: காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை தனித்துச் சென்று சந்திப்பது சரியாக இருக்காது என்று தில்லியில் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தில்லியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவினை எவ்வாறு கொண்டாடுவது என்பது பற்றிய  ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றிருந்தார். ஆலோசனைக்குப்  பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

முன்னரே உங்களிடம் தெரிவித்திருந்தவாறு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவினை எவ்வாறு கொண்டாடுவது என்பது பற்றிய  ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இங்கு வந்திருந்தேன்.

அதுதொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றது. அப்பொழுது திண்டுக்கல் காந்தி கிராம பல்கலை கழகத்தை ரூ 500 கோடி செலவில் தரம் உயர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அத்துடன் காந்தி ஜெயந்தியன்று இலவச வேட்டி, சேலை வழங்க தனியாக கோரிக்கை வைத்துள்ளோம்.

காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேச தமிழக அரசு சார்பில் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்திருக்கிறோம்.ஆனால் கோரிக்கை மனுவுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து இதுவரை பதில் வரவில்லை. நினைவூட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு பிரதமர் வந்தபோதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன்.

முன்னரே அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி காவிரி விவகாரத்தில், நான் பிரதமரை தனியாக சந்திப்பது நன்றாக இருக்காது. கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் உடன் சந்திப்பதே முறையாகும்.

காவிரி நீரை  விவசாயிகளுக்கு பெற்றுத்தர தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.