தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரது வீடுகளுக்கு சனிக்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கடலூரைச் சேர்ந்த பிரதீப் என்ற பெயரில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய தீவிர விசாரணை மற்றும் சோதனைக்குப் பின்னர் முதல்வர் வீட்டுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும் காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கடலூரைச் சேர்ந்த புவனேஷ் என்பவர் என விசாரணையில் தெரியவந்தது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

9,159 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

குடும்ப அட்டைகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்: குமாரபாளையம் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


