மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கிருஷ்ணசாமி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: விஜயகாந்த் கோரிக்கை

உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை வைத்தார்.

News image
Updated On :6 மே 2018, 10:36 am

நீட் தேர்வு எழுத மகனை எர்ணாகுளம் அழைத்துச்சென்ற திருத்துறைப்பூண்டிச் சேர்ந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்தார். தந்தை மரணமடைந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் நுழைவு தேர்வு எழுதினார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் அவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கியும், கஸ்தூரி மகாலிங்கத்தின் முழு கல்விச் செலவையும் தமிழக அரசு ஏற்கும் எனவும் உறுதியளித்தார். 

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் போதாது என்பதால் நிதியுதவியை அதிகரிக்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.