மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஜாக்டோ - ஜியோ அமைப்புக்கு அமைச்சர் ஜெயகுமார் வேண்டுகோள்

போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஜாக்டோ - ஜியோ அமைப்புக்கு அமைச்சர் ஜெயகுமார் திங்கள்கிழமை வேண்டுகோள் வைத்தார்.

News image
Updated On :7 மே 2018, 4:05 am

போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஜாக்டோ - ஜியோ அமைப்புக்கு அமைச்சர் ஜெயகுமார் திங்கள்கிழமை வேண்டுகோள் வைத்தார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பு நாளை சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் ஜாக்டோ - ஜியோ அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். ஆக்கபூர்வமாக செயல்பட்டு மக்கள் நலனுக்காக சிறப்பான நிர்வாகத்தை வழங்க அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.