தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

குழந்தைகள் கடத்தல் கும்பல் என நினைத்து 5 பேர் மீது கொலை வெறி தாக்குதல்: மூதாட்டி பலி

திருவண்ணாமலை மாவட்டம் அத்திமூரில், குழந்தைகளைக் கடத்த வந்த கும்பல் என நினைத்து 5 பேர் மீது பொதுமக்கள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் மூதாட்டி ஒருவர் பலியானார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் அத்திமூரில், குழந்தைகளைக் கடத்த வந்த கும்பல் என நினைத்து 5 பேர் மீது பொதுமக்கள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் மூதாட்டி ஒருவர் பலியானார்.

காரில் வந்த 5 பேர், அத்திமூர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு சாக்லேட் போன்ற இனிப்புகளை வழங்கியுள்ளனர்.

இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், காரை துரத்திச் சென்று, காரில் இருந்தவர்களை கீழே இறக்கி கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அத்திமூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கோயில் வழிபாட்டுக்காக திருவண்ணாமலை வந்தது தெரிய வந்திருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி பொன்னி தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குழந்தைகள் கடத்தல் தொடர்பாக சமூக தளங்களில் பரவி வரும் தகவல்கள் புரளி, அதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் எஸ்.பி. பொன்னி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.