சென்னையிலிருந்து இரவு புறப்பட்டு காலை மேட்டுப்பாளையம் வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை பகல் நேரத்தில் பயணிகள் பயன்படுத்தும் வகையில், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வழியே மதுரை செல்லும் பகல் நேர ரயிலாக இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் உப்பலா சுப்பாராவ் தெரிவித்தார்.
சேலம் ரயில்வே கோட்ட மேலாளராகப் பொறுப்பேற்ற பின்னர், உப்பலா சுப்பாராவ் முதன்முறையாக மேட்டுப்பாளையத்துக்கு புதன்கிழமை வந்தார். பின்னர் உதகை மலை ரயில் பாதை, என்ஜின் பழுது நீக்கும் இடம், ரயில்வே அருங்காட்சியகம் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உதகை மலைரயில் புறப்படும் வளாகப் பகுதியில் மரக்கன்று ஒன்றையும் அவர் நட்டார்.
பின்னர்அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
சுற்றுலாத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறை பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மேட்டுப்பாளையத்திலிருந்து தினசரி உதகைக்கு இயக்கப்படும் நீலகிரி மலை ரயிலுக்கு கூடுதலாக ஒரு என்ஜினும், 15 பெட்டிகளும் தயாராகி வருகின்றன.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உதகைக்கு தற்போது கோடைக்கால சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு மலை ரயிலின் கட்டணம் அதிகம் என்றபோதிலும், சுற்றுலாவைக் கருத்தில்கொண்டு இயக்கப்படும் சிறப்பு மலை ரயில் என்பதால் இந்தக் கட்டண உயர்வு தவிர்க்க இயலாதது.
தினசரி சென்னையிலிருந்து இரவு புறப்பட்டு அதிகாலை மேட்டுப்பாளையம் வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை பகல் நேரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வழியே மதுரை சென்று வரும் வகையில் புதிய ரயிலாக இயக்கவும் ஆலோசிக்கப்படுகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் கோட்ட முதன்மை வணிக மேலாளர் விஜூவின், கோவை ரயில் நிலைய முதன்மை வணிக மேலாளர் சிட்டிபாபு, கோச் பொறியாளர் அஷ்ரப், ரயில்வே கோட்ட முதுநிலைப் பொறியாளர் பெருமாள், கோட்டப் பொறியாளர் நல்லமுத்து, ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மங்களூர் விரைவு ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க கோரிக்கை
கோட்ட மேலாளரின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் டி.எல்.எஸ்.ராஜேந்திரன் (சேலம் கோட்டம்), ஹபிபுல்லா, ஜியார்ஜ் குட்டி, இக்கியல் (மேட்டுப்பாளையம்), நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் தங்கமணி ஆகியோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அதில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் 24 பெட்டிகள் நிற்கும் வகையில் நடைமேடை நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மங்களூர் விரைவு ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும். ரயில் நிலையத்தினுள் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். பாரதிநகர்- சாந்தி நகர் இடையே ரயில்வே பாதையில் தினமும் 50,000 பேர் கடந்து செல்கின்றனர். இங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். கோவை- மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட கோட்ட மேலாளர் உப்பலா சுப்பாராவ், கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 98-ஆக உயா்வு

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 09) - மேஷ ராசிக்கு முன்னேற்றம்!

இன்றைய ராசி பலன்கள் (09.08.2026) 12 ராசிகளுக்கும்! எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு!

ஜப்பானைத் தாக்கிய ‘டால்பின்’ புயல்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


