நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரஜினியும் மோடியும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கலாம்: ஆடிட்டர் குருமூர்த்தி 

ரஜினியும் மோடியும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கலாம் என்று 'துக்ளக்' இதழின் ஆசிரியர் : ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 மே 2018, 3:26 pm

DIN

சென்னை: ரஜினியும் மோடியும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கலாம் என்று 'துக்ளக்' இதழின் ஆசிரியர் : ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் 'பிக்கி' அமைப்பு சார்பாக நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் 'துக்ளக்' இதழின் ஆசிரியர் : ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும் பொழுது கூறியதாவது:

அதிமுக அரசுக்கு செயல்பாடு ஒன்று இருப்பது போல் தெரியவில்லை; இருந்தால் பார்க்கலாம் .நீட் குறித்து முழுபுரிதல் யாருக்கும் இல்லை என்பதால்தான் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ரஜினிக்கு நான் ஆலோசகராக உள்ளேன் என்று கூறப்படுவது உண்மையாக இருந்தால் எனக்குப் பெருமைதான்.

தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என நம்புகிறேன்.ரஜினியும் மோடியும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கலாம். கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என நம்புகிறேன்  காவிரி பிரச்னையில் வேறு சிந்தனையுடைய கர்நாடகா, கேரளா பேசி முடிவுக்கு வர வேண்டும். கர்நாடக தேர்தலை கருதி காவிரி திட்டவரைவை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியது நல்லது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.