ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2018, 9:01 pm

DIN

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம்., எம்.சிஎச் ஆகிய படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,215 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழகத்தில் 192 இடங்கள் உள்ளன. பொதுவாக எம்.பி.பி.எஸ். படிப்பில் 15 சதவீதம், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் மட்டுமே அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும். மீதமுள்ள இடங்களுக்கான கலந்தாய்வை அந்தந்த மாநில அரசுகளே நடத்தும். ஆனால் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரையில் அனைத்து இடங்களுக்கான கலந்தாய்வையும் மத்திய சுகாதார சேவைகள் இயக்ககமே நடத்துகிறது. 
அந்த வகையில் 2018 }19 }ஆம் கல்வியாண்டுக்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஜூலை 6 }ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. மத்திய தேர்வு வாரியத்தின் ய்க்ஷங்.ங்க்ன்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை அனுப்பலாம். ஆன்}லைன் மூலமாக மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை அனுப்புவதற்கு மே 31 }ஆம் தேதி கடைசியாகும். ஜூலை 6 }ஆம் தேதி தேர்வு நடைபெற்று, ஜூலை 15 }ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.