மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திம்பம் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப் பாதையில் தேங்காய் மட்டை பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் காயமடைந்தார். விபத்து காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
திம்பம் மலைப் பாதையில் கவிழ்ந்து கிடக்கும் லாரி.
Updated On :14 மே 2018, 8:23 pm

DIN

திம்பம் மலைப் பாதையில் தேங்காய் மட்டை பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் காயமடைந்தார். விபத்து காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைப் பாதையான திம்பம் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்நிலையில், கர்நாடகத்தில் இருந்து தேங்காய் பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப் பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியை அபிமன்யு ஓட்டி வந்தார். 13-ஆவது வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் காயமடைந்தார்.
விபத்து காரணமாக தமிழகம் - கர்நாடகம் இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இரு மாநில வாகனங்களும் திம்பம், ஆசனூர், பண்ணாரியில் வரிசையாக அணிவகுத்து நின்றன. அங்கு வந்த மீட்பு வாகனம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீரமைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.