மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தேர்தலுக்காக நிறுத்தப்படவில்லை என்றால் பெட்ரோல், டீசல் விலைகள் இன்று உயர்த்தப்பட்டது ஏன்?

கர்நாடக தேர்தலை முன்னிட்டு நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலைகளை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளது.

News image
Updated On :14 மே 2018, 6:11 am

DIN


சென்னை: கர்நாடக தேர்தலை முன்னிட்டு நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலைகளை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் மாதம் 24ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகள் அன்றாடம் நிர்ணயிக்கும் முறை நிறுத்தப்பட்டிருந்தது.

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல.. சுமார் 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. 

இதற்கும், தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, விலையைக் கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட முயற்சி என என்னென்னவோ சப்பைக் கட்டுகளை எண்ணெய் நிறுவனங்களும், பாஜக தலைவர்களும் மாறி மாறி பாடி வந்தார்கள். சரி உண்மையிலேயே நமது நலன் கருதித்தான் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட வில்லை என்றுகூட ஒரு சில பாமர மக்கள் நம்பவும் துணிந்துவிட்டார்கள்.

இவ்வளவு அக்கப்போருக்கும் இடையே, கடந்த சனிக்கிழமை கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்து இனிதே முடிந்தது. ஒரு பக்கம், தேர்தல் முடிந்துவிட்டதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிடுமோ என மக்கள் அச்சம் கொள்ள, இதற்கும், தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கும் போது, எப்படி உடனடியாக விலையை உயர்த்த முடியும் என்று பாமர மக்கள் நம்பிக்கையோடு இருந்தார்.

ஆனால், நாங்கள் சொல்வதெல்லாம் பொய்.. எங்களிடம் நிஜமே இல்லை.. என்ற பாணியில் தடாலடியாக இன்று பெட்ரோல், டீசல் விலைகள் வழக்கம் போல உயர்த்தப்பட்டுள்ளன. 

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 18 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.61 ஆகவும், டீசல் விலை 23 காசுகள் உயர்ந்து ரூ.69.79 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக தேர்தலுக்காக, தினந்தோறும் விலை நிர்ணயிக்கும்முறை நிறுத்தப்படவில்லை என்றால், இன்று உயர்த்தப்பட்டதன் காரணம் என்ன என்று யார் பதில் சொல்லப் போகிறார்கள்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் அது சட்டவிரோதமல்லவா? இத்தனை நாட்களின் விலை ஏற்றத்தால் சந்தித்த நட்டத்தை (???) எண்ணெய் நிறுவனங்கள் யார் தலையில் சுமத்தப் போகின்றன? எந்த வகையில்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.