சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் வரும் சனிக்கிழமை (மே 19) வேலூர், கடலூர் ஆகிய இடங்களில் உள்ள அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூர் மற்றும் கடலூரில் உள்ள அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் சனிக்கிழமை (மே 19) வழக்கமான பணி நாள்களைப் போலவே செயல்படவுள்ளன. இந்த பாஸ்போர்ட் முகாமில் பங்கு பெற அனைத்து விண்ணப்பதாரர்களும் ஜ்ஜ்ஜ்.ல்ஹள்ள்ல்ர்ழ்ற்ண்ய்க்ண்ஹ.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பதிவு செய்து ஏ.ஆர்.என். (விண்ணப்பப் பதிவு எண்-அதச) உருவாக்கி இணையதளத்தின் வழியே உரிய கட்டணத்தைச் செலுத்தி பின்னர் சந்திப்பதற்கான நேரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். முகாமில் பங்குபெறும் விண்ணப்பதாரர்கள் பார்வை நேரம் மற்றும் ஏ.ஆர்.என். விவரங்களை அச்சிட்ட வடிவத்தில் வேலூர், கடலூர் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்திற்குக் கொண்டு வர வேண்டும். மேலும் தேவையான ஆவணங்களின் மூலங்களையும் சுயசான்று அளிக்கப்பட்ட இரண்டு நகல்களையும் கொண்டு வர வேண்டும். புதிய மற்றும் மறுவெளியீடு விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
சனிக்கிழமை நடைபெறும் முகாம் சந்திப்பு நேர ஒதுக்கீடு புதன்கிழமை (மே 16) பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும். முகாம் நாளில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேர அடிப்படையில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். நேர்காணலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மற்றும் நிராகரிக்கப்பட்டுள்ள டோக்கன்கள் இந்த முகாமின்போது பரிசீலிக்கப்பட மாட்டாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!

வளா்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க மக்கள் 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்: பிரதமா் மோடி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

