செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

விவசாயிகள் மீண்டும் வஞ்சிக்கப்படக் கூடாது: பழ.நெடுமாறன்

தமிழக விவசாயிகள் மீண்டும் வஞ்சிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பாகும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :14 மே 2018, 8:05 pm

தமிழக விவசாயிகள் மீண்டும் வஞ்சிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பாகும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து மூன்று மாதங்கள் கடந்த பிறகு மத்திய அரசு வரைவு திட்டம் ஒன்றினை அளித்துள்ளது. 
நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அந்தந்த மாநிலத்துக்கு உரிய நீரைத் திறந்து விடும் அதிகாரம் மேலாண்மை வாரியத்துக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதைப் போன்ற அதிகாரம் இப்போது அளிக்கப்பட்டுள்ள வரைவு திட்டத்துக்கு உண்டா என்பது தெளிவாக இல்லை. உச்ச நீதிமன்றம் 16-ஆம் தேதி அதைத் தெளிவாக்க வேண்டும். தமிழக விவசாயிகள் மீண்டும் வஞ்சிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.