காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக, புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஆர். சுவாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: வித்யாகிரி கல்லூரியின் முதல்வராகவும், கணிதவியல் துறைத் தலைவராகவும் உள்ள ஆர். சுவாமிநாதன், கணிதத் துறையில் நீண்டகால அனுபவம் பெற்றுள்ளார். இவர், பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும், மேல்நிலைப் பள்ளிகளுக்குமான கணிதப் பாடப் புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பல்வேறு நாடுகளுக்கும் கல்விப் பயணம் மேற்கொண்டு கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். தமிழக ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் பன்வாரிலால் புரோஹித், அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக சுவாமிநாதனை, கடந்த 3.5.2018 முதல் 3 ஆண்டுகளுக்கு நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, சுவாமிநாதன் அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொ. சுப்பையாவை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடி ஒரு வித்தைக்காரர்! ஆபரேஷன் சிந்தூர் போன்ற வித்தைகளை நிகழ்த்தியவர்! ராகுல் காந்தி

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

