குட்கா வழக்கில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு சூலூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே, கண்ணம்பாளையத்தில் போலி குட்கா ஆலையை காவல் துறையினர் ஏப்ரல் 27-ஆம் தேதி கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, ஆலையில் வெளிப்படையான சோதனை நடத்த வேண்டும் என கூறி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, காவல் துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக திமுகவினர் 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கோவை சிங்காநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் நா.கார்த்திக், சோமனூரைச் சேர்ந்த தங்கராசு உள்ளிட்டோர் தலைமைறைவாகினர்.
இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த இருவரும் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகினர். அவர்களை விசாரித்த நீதிபதி வேடியப்பன், மறு உத்தரவு வரும் வரை இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, சூலூர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு இருவரும் கையெழுத்து இட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு தொடா் தீப ஓட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்வாரிய தலைமைப் பொறியாளா் ஆய்வு

17.4.1976: அம்பத்தூரில் ரூ. 2.55 கோடி செலவில் பால் பண்ணை - ராஷ்டிரபதி துவக்கி வைத்தார்

விடியல் அல்ல, விளம்பர ஆட்சிதான் நடத்தியது திமுக! அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

