இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சாமிதோப்புக்கு வருகை தந்த அமைதி ரதயாத்திரை

அகில பாரத பத்மநாபதாஸ் பக்த ஜனசேவா சமிதி சார்பில் கேரள மாநிலம் காசர்கோட்டில் தொடங்கிய அமைதி ரத யாத்திரை சாமிதோப்பு வந்தது.

Updated On :14 மே 2018, 10:15 pm

அகில பாரத பத்மநாபதாஸ் பக்த ஜனசேவா சமிதி சார்பில் கேரள மாநிலம் காசர்கோட்டில் தொடங்கிய அமைதி ரத யாத்திரை சாமிதோப்பு வந்தது.
உலக அமைதி வேண்டி சாதுக்காளால் தொடங்கப்பட்ட இந்த ரத யாத்திரை கேரளத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக சாமிதோப்பை வந்தடைந்தது. அங்குள்ள அன்புவனத்துக்கு வந்த யாத்திரைக் குழுவினரை, பாலபிரஜாபதி அடிகளார் வரவேற்றார்.
இந்த ரதயாத்திரையில் கேரளத்தைச் சேர்ந்த பிரமானந்தா தீர்த்த புஷ்பாஞ்சலி சுவாமி, சொருபானந்த மடம் சிவனந்தகிரி சுவாமிகள், மோகன்குமார் ஆகியோர் வந்திருந்தனர். தொடர்ந்து சாமிதோப்பில் சாதுக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
இதில், திருக்கோயில்களை தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லக்கூடாது. சாமிதோப்பு தலைமைப்பதியை தேவசம்போர்டு நிர்வாகம் கைப்பற்றக் கூடாது. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி சாமிதோப்பில் சாதுக்கள் சங்கமம் என்ற மாநாடு நடத்துவது என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.